ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனையின் போது விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த ரயிலானது டெல்லி மெஜிந்திரா பிரிவில், ஜானக்புரியில் இருந்து நொய்டா வரை 12.64 கிலோமீட்டர் தூரம் இயக்கப்பட உள்ளது. இதற்காக முழு வீச்சில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கால்கஜி மெட்ரோ ரயில் நிலையத்தில் இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. அப்போது ஆளில்லா மெட்ரோ ரயிலானது பக்கவாட்டு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. மேலும் சுவரை உடைத்துக் கொண்டு அந்தரத்தில் நின்றது. அதிருஷ்டவசமாக ரயில் தரையில் கவிழவில்லை. ரயில் விபத்துக்குள்ளானது குறித்து மெட்ரோ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக இந்த ஆளில்லா மெட்ரோ ரயிலுக்கு மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் பாதுகாப்பு சான்றிதழ் வழங்கி இருந்தார்.
மெஜந்தா லைனில் மெட்ரோ ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு கடந்த நவம்பர் 5-ம் தேதி இரண்டு மெட்ரோ ரயில்கள் கலிண்டி குஞ்ச் முனையத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டது. டிப்போவில் இருந்து பிரேக் சோதனை முடிவதற்கு முன்பு ரயில் சென்றுவிட்டதே இவ்விபத்துக்கு காரணம் என்று மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தன்று துவக்கி வைப்பதாக இருந்த நிலையில், தற்போது விபத்துக்குள்ளானதால், இந்த நிகழ்ச்சி நடைபெறுமா? என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?