குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மிகப்பெரிய அடி கொடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், குஜராத்தில் பாஜகவின் தேர்தல் பிரசாரம் தோல்வி அடைந்திருப்பதாகத் தெரிவித்தார். மோடியின் பிம்பத்தை மக்கள் நிராகரித்துள்ளனர் என்பதையே குஜராத் தேர்தல் முடிவு காட்டுவதாகவும் அவர் கூறினார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைத்திருப்பதாகவும், பாரதிய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாரதிய ஜனதாவிற்கு மக்கள் நல்ல பாடம் கற்பித்துள்ளதாகவும் கூறினார். குஜராத்தில் முந்தைய தேர்தலில் 115 இடங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா தற்போது 99 இடங்களில் மட்டுமே வெற்றி கண்டு, ஆட்சியை தக்கவைத்தது. 61 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, இம்முறை 77 இடங்களில் வெற்றிவாகை சூடியது எனவும் சுட்டிக்காட்டினார். நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தின்போது வளர்ச்சி, ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து பேசவில்லை என்று கூறிய ராகுல், மோடியின் நம்பகத்தன்மையில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக விமர்சித்தார்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!