JUST IN

Advertisement

ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ரன் குவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 662 ரன்கள் குவித்துள்ளது. 


Advertisement

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 403 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா அணி, 9 விக்கெட் இழப்புக்கு 662 ரன்கள் குவித்து இன்று டிக்ளேர் செய்தது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் இரட்டைச் சதம் அடித்தார். அவர் 239 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் 181 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளையும் ஓவர்டன் 2 விக்கெட்டுகளையும் வோக்ஸ், அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


Advertisement

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, தொடக்கத்திலேயே ஸ்டோன்மேன் விக்கெட்டை பறிகொடுத்தது. குக்கும் வின்ஸும் ஆடிவருகின்றனர். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement