JUST IN

Advertisement

இனி லீக் போட்டிகளில் மட்டுமே கவனம்: பிராவோ உறுதி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு திரும்ப வாய்ப்பு இல்லை என்பதால் லீக் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர் டிவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.


Advertisement

துபாயில் நடைபெறும் டி10 கிரிக்கெட் லீக் போட்டியில், சேவாக்கின் மராத்தா அரேபியன்ஸ் அணிக்காக ஆடிவரும் பிராவோ கூறும்போது, ’எனது உடல்நிலை தகுதியான பின்பும் அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு இப்போது 34 வயதாகிறது. இனியும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெறுவது சந்தேகம்தான். ரசிகர்களுக்காக எவ்வளவு காலம் விளையாட முடியுமோ, அவ்வளவு காலம் இது போன்ற லீக் போட்டிகளில் விளையாடுவேன். இனி அதற்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன். காயம் காரணமாக, கடந்த ஒன்பது மாதங்களாக நான் கிரிக்கெட் ஆடவில்லை. ஐபிஎல் போட்டியில் கூட விளையாட முடியவில்லை. இனி கவனமாக விளையாடுவேன்’ என்றார்.

பிராவோ, கடந்த ஏழு வருடங்களாக வெஸ்ட் இண்டீஸின், டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை. 2014-ம் ஆண்டில் இருந்து அந்நாட்டின் ஒரு நாள் கிரிக்கெட் அணியிலும் சேர்க்கப்படவில்லை. டி20 போட்டியில் மட்டும் சேர்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement