ரயில்களின் உள்ளே சிசிடிவி கேமரா, வைஃபை: அமைச்சர் தகவல்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பெண்கள் பாதுகாப்பை முன்னிட்டு ரயில்களின் உள்ளே சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுபற்றி அவர் கூறும்போது, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக, இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துகிறோம். அவை, ரயில்களில் வைஃபை இணைப்புக் கொடுப்பது, அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் நீண்ட தொலைவு செல்லும் ரயில்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்துவது. 2018ம் ஆண்டை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் மனித கடத்தலுக்கு எதிராக இணைந்து போராடும் ஆண்டாக அர்ப்பணித்துள்ளோம். இதனை அனைத்து ரயில்வே பிரிவுகளிலும் மேற்கொள்வோம்’ என்றார்.

நிர்பயா நிதியை நிதியை கொண்டு சி.சி.டி.வி. கேமரா பொருத்த, 983 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement