இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் ஸ்மித் அபார சதமடித்தார். இது அவருக்கு 22 வது சதம் ஆகும்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஆஷஸ் டெஸ்ட் தொடரான இதன் மூன்றவது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடந்து வருகிறது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 403 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியின் மலன் 140 ரன்களும் பர்ஸ்டோவ் 119 ரன்களும் குவித்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது ஆஸ்திரேலிய அணி. பென்கிராப்ட் 25 ரன், வார்னர் 22 ரன், கவாஜா 50 ரன், மார்ஷ் 28 ரன் எடுத்து வெளியேற கேப்டன் ஸ்மித் அபார சதமடித்தார்.
இது அவருக்கு 22-வது டெஸ்ட் சதம். அதோடு தொடர்ந்து நான்கு வருடங்களாக டெஸ்ட்டில் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த இரண்டாவது கிரிக்கெட் வீரர் ஆகி இருக்கிறார்.
ஸ்மித் 139 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். அவருடன் மார்ஷ் 39 ரன்களுடன் ஆடிவருகிறார். அந்த அணி, மதிய உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்துள்ளது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்