ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி 5 ஆய்வாளர்கள் அதிரடி இடமாற்றம்

Chennai-Commissioner-order-to-5-Inspector-was-Transferred-for-RK-Nagar-ByElection

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி காவல்துறை ஆய்வாளர்கள் 5 பேரை பணியிடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். 


Advertisement

ஆர்.கே நகரில் காவல்துறையினர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், தேர்தல் ஆணையரிடமும், காவல் ஆணையரிடமும் முறையிட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறை ஆய்வாளர்கள் 5 பேரை பணியிடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆர்.கே. நகர் சட்டம் ‌ஒழுங்கு ஆய்வாளர் ஜெயராஜ், பட்டினப்பாக்கம் காவல்நிலைய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அப்பொறுப்பில் இருந்த ஆய்வாளர் நடராஜன், ஆர்.கே.நகர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் கொடிராஜ், ஆர்.கே.நகர் குற்றப்பிரிவு ஆய்வாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவ விடுப்பில் இருந்த ஆர்.கே.நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் இளவரசு, கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இதேபோன்று கொத்தவால்சாவடி குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆரோக்கியராஜ், ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட காசிமேடு குற்றப்பிரிவு ஆய்வாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement