ஆஸ்திரேலிய அணியுடனான 3-ஆவது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 305 ரன்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது டெஸ்ட்டில் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4‌ விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்துள்ளது.


Advertisement

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடக்கும் 3 ஆவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களான அலெஸ்டர் குக் 7 ரன்களிலும், மார்க் ஸ்டோன்மேன் 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஜோ வின்ஸ் 25 ரன்களும், கேப்டன் ஜோ ரூட் 20 ரன்களும் சேர்த்தனர்.

5-வது விக்கெட்டுக்கு ஜானி பயர்ஸ்டாவ் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மலன் சர்வதேச போட்டிகளில் முதல் சதத்தை பதிவு செய்தார். முதல் நாள் முடிவில் டேவிட் மலன் 110 ரன்களுடனும், பயர்ஸ்டோவ் 75 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்துள்ளது.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement