இந்தியாவில் தயாரான நீர்மூழ்கி போர்கப்பல் ஐஎன்எஸ் கல்வாரியை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
நீர்மூழ்கி போர்கப்பலான ஐஎன்எஸ் கல்வாரி, மேக் இன் இந்தியா திட்டத்தில் பிரெஞ்சு தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. கடந்த 2015ஆம் தயாரிக்கப்பட்ட இக்கப்பல், 67.5 மீட்டர் நீளமும் 12.3 மீட்டர் உயரமும் கொண்டது. ஆழ்கடலில் இருந்து ஏவுகணைகளை செலுத்துதல், எதிரிகள் அரியாத வண்ணம் சத்தமின்றி இடம்பெயர்தல் மற்றும் ரேடார் போன்ற தொழில்நுட்பங்கள் மூலமாக இருப்பிடத்தை அரிய இயலாத வகையில் இப்போர்க்கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்து முழுமையாக தயாரிக்கப்பட்ட இந்தக் கப்பல் கடந்து 3 மாதங்களாக சோதனை பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் போர்க்கப்பலை இந்தியக் கடற்படையில் இணைக்கும் விழா இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, நீர்மூழ்கி போர்க்கப்பல் கல்வாரியை நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் பேசிய மோடி, ஐஎன்எஸ் கல்வாரி போர்கப்பல் இந்திய-பிரான்ஸ் நட்புறவுக்கு சிறந்த உதாரணம் என குறிப்பிட்டார். அத்துடன் தீவிரவாத அத்துமீறல், போதைப்பொருள் கடத்தல், கடல்வழி சட்டவிரோத செயல்கள், சட்டவிரோத மீன்பிடிப்பு உள்ளிட்டவைகளை இந்தக் கப்பல் தடுக்கும் என்று கூறினார். இந்த விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Loading More post
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு
9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?