ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக வேட்பாளர் மருது கணேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அனைத்து மையங்களிலும் நடைபெறும் வாக்குப்பதிவை நேரடியாக ஒளிபரப்பக் கோரி திமுக வேட்பாளர் மருது கணேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மருது கணேஷ் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், மனுவை தாக்கல் செய்தார். ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா, வாக்குவாதம், வாக்குச்சாவடியைக் கைப்பற்றுதல் போன்றவற்றிக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வருவதாகவும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் திமுகவின் மனுவில் கூறப்பட்டுள்ளது. தேர்தலை நேர்மையாக நடத்த கூடுதலாக துணை ராணுவ வீரர்களை பணியமர்த்த வேண்டும் என்றும், வீதிகள்தோறும் 4 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் கடந்த 5ஆம் தேதி அளிக்கப்பட்ட மனுவில், தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கறிஞர் வில்சன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த மனு வரும் 18ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை