குஜராத்தில் இன்று 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குஜராத் தேர்தலில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை நேற்று முன்தினம் நிறைவடைந்தது. வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு முன்னதாக 48 மணி நேரம் பரப்புரை செய்யும் விதமாக பேசவோ, தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கவோ கூடாது. அப்படி செய்தால் அது தேர்தல் ஆணைய விதிகளின் படியும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படியும் குற்றமாகும். நேற்று காங்கிரஸ் தலைவர் குஜராத் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அவரது பேட்டி பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டது.
ராகுல் காந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தது தொடர்பாக அவரிடம் இருந்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 18 ஆம் தேதிக்குள் ராகுல் விளக்கமளிக்குமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ராகுல் காந்தியின் பேட்டியை ஒளிபரப்பிய தொலைகாட்சிகள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 126(1)(பி) பிரிவின் கீழ் காவல் நிலையத்தில் வழக்கு தொடருமாறு குஜராத் தேர்தல் ஆணையத்திற்கு, தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்