JUST IN

Advertisement

சங்கர் ஆணவக்கொலை வழக்கு: கவுசல்யாவின் தந்தை உள்பட 8 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 8 பேர் குற்றவாளிகள் என திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


Advertisement

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்புத் திருமணம் செய்த பொறியியல் கல்லூரி மாணவர் சங்கர் (22) கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி, கூலிப்படைக் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கவுசல்யாவையும் அந்தக் கும்பல் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உடல்நலம் தேறினார். பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது.

இந்த ஆணவக்கொலை தொடர்பாக, கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமா பாண்டிதுரை அவரது உறவினர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு கோவை மற்றும் திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி  உள்பட 8 பேர் குற்றவாளிகள் என திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை, வாகனம் ஏற்பாடு செய்துகொடுத்த பிரசன்னா குமார் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என 8 பேரும் நீதிபதியிடம் முறையிட்டுள்ளனர். உணர்ச்சிவசப்பட்டு இந்த காரியத்தை செய்துவிட்டோம். எனவே தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் குறைந்தபட்ச தண்டனை வழங்க அரசு தரப்பு மறுப்பு தெரிவித்து வருகிறது. விரைவில் 8 பேருக்கும் வழங்கப்படும் தண்டனை விவரத்தை நீதிபதி அலமேலு அறிவிக்க உள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement