[X] Close >

திருத்தணியில் வெளிப்படையாக நடக்கும் சூதாட்டம்

Thiruthani-Gambling-in-open-edition

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நம்பர்கள் மீது பணம் கட்டும் சூதாட்டம் தொடர்ந்து வெளிப்படையாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏழை எளிய தொழிலாளர்களை பாதிக்கும் இந்த சூதாட்டத்தை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Advertisement

திருத்தணியின் ஏழை தொழிலாளர்களை அதிகம் ஈர்த்துள்ளது காட்டன் என்ற சூதாட்டம். நகரின் முக்கிய பகுதிகளான மேட்டுத் தெரு, பேருந்து நிலையம், சூப்பர் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் உட்பட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 10 வரை தினமும் காட்டன் கேம் சூதாட்டம் நடைபெற்று வருகிறது. ஒரு நம்பர் மீது ஒரு ரூபாய் செலுத்தினால், அந்த நம்பருக்கு பரிசு கிடைத்தால் 100 ரூபாய் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளதால் கூலித் தொழிலாளர்கள், இளைஞர்கள் என பலரும் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை இழந்து வருகின்றனர்.

தினமும் இரவு 10 மணி வரை பணத்தை பெற்றுக்கொண்டு துண்டு சீட்டில் தேதி, பணம் செலுத்திய நம்பர், தொகை ஆகிய விவரங்களைக் கொண்ட சீட்டை ஏஜெண்டுகள் வழங்குகிறார்கள். பரிசு விழுந்தால் கட்டிய பணத்தை போல 100 மடங்கு வருவாய் கிடைக்கும் என்று ஆசைப்பட்டு பல்வேறு நம்பர்கள் மீது ஒரு ரூபாய் முதல் ஆயிரம் வரை தொழிலாளர்கள் கட்டுகின்றனர். ஏஜெண்டுகள் சேகரிக்கும் விவரங்கள் சூதாட்ட தலைமையிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அடுத்த நாள் காலை பரிசு விழுந்த எண்கள் தெரிவிக்கப்படுகிறது. பரிசு விழுந்த எண்களைக் கொண்டவர்கள் செலுத்திய பணத்திற்கு 100 சதவிகிதம் அதிகமாக பரிசு வழங்கப்படும் என்றும் பணம் கட்டாத நம்பருக்கு பரிசு விழுந்தால் செலுத்திய தொகை அனைத்தும் ரகசிய தலைமை அலுலகத்திற்கு சென்று சேர்வதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

இந்த மோகத்தில் சிக்கி ஏராளமான தொழிலாளர்களும், இளைஞர்களும் தங்களுடைய அன்றாட வருமானத்தை முழுமையாக இழந்து வருகின்றனர். சட்டவிரோதமாக நடைபெற்று வரும் இந்த சூதாட்டத்தை ஒழிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருத்தணி நகர பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close