ஆர்.கே.நகரில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உண்டியல் மூலம் பணம் வசூலித்து பரப்புரை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆர்.கே.நகரில் அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உண்டியல் மூலம் பணம் வசூலித்து பரப்புரை மேற்கொண்டார்.


Advertisement

ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக வேட்பாளர் மதுசூதனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, திமுக வேட்பாளர் மருதுகணேஷிற்காக, ஆதரவு கட்சியினருடன் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோருடன் ஸ்டாலின் பரப்புரை செய்தார். பிற்பகலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சக்கரவர்த்தி உண்டியல் மூலம் பணம் வசூலித்து பரப்புரையில் ஈடுபட்டார். இதேபோல் பிற அரசியல் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் வாக்கு சேகரித்தனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement