[X] Close >

காங். தலைவராக ராகுல் காந்தி: இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு

Rahul-Gandhi-to-be-named-Congress-president-today

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்யும் அறிவிப்பு இன்று அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்றே கடைசி நாளாகும். ராகுல் காந்தியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவரை தலைவராக தேர்ந்தெடுக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளது. 

இதைத் தொடர்ந்து வரும் 16ம் தேதி ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது. 132 ஆண்டு வரலாற்றுடன் இந்தியாவின் பழமையான கட்சியாக திகழும் காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக தலைமை வகித்து வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து அதிக காலம் தலைவராக இருந்தவர் என்ற பெருமை சோனியா காந்திக்கு உண்டு
 


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close