[X] Close >

சரிந்த அணியை தனி ஆளாக மீட்ட தோனி

SL-topple-India-over-for-112-with-Lakmal-four-for-Lakmal

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தோனியின் சிறப்பான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டு இந்திய அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 


Advertisement

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஷிகர் தவான் டக் அவுட் ஆகி வெளியேறினார். தவான் அவுட் ஆன சிறிது நேரத்தில் மளமளவென 3 விக்கெட்டுகள் சரிந்தது. ரோகித் சர்மா(2), ஷ்ரேயாஸ் ஐயர்(9), தினேஷ் கார்த்திக்(0), மணிஷ் பாண்டே(2) என வந்த வேகத்தில் நடையை கட்டினர். 16 ரன்கள் எடுப்பதற்குள் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லக்மால் தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.


Advertisement

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா 2 பவுண்டரிகளை விளாசினார். அவரும் 10 ரன்னில் கேட்சாகி வெளியேறினார். அவரை தொடந்து புவனேஸ்குமாரும் டக் அவுட் ஆனதால் இந்திய அணி 29 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 50 ரன்களுக்குள் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிடும் என்ற பரிதாப நிலை ஏற்பட்டது. இந்திய அணியின் ஒருநாள் போட்டியின் குறைந்தபட்ச ஸ்கோர் 54. இதைவிட இன்றைய போட்டியில் குறைவான ரன்கள் எடுக்கப்படும் என்றும் கருதப்பட்டது.

இந்த நேரத்தில் தோனியும், குல்தீப் யாதவும் ஜோடி சேர்ந்தனர். நிதானமாக ரன்களை சேர்த்தனர். குறிப்பாக விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இடைஇடையே பவுண்டரிகளை அடித்தனர். 22.5 ஓவரில் இந்திய அணி 50 ரன்களை எட்டியது.  குல்தீப் யாதவ் 19 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனதால் மேலும் நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் வந்த பும்ரா டக் அவுட் ஆகியிருந்தாலும் 15 பந்துகள் நிலைத்து நின்று தோனிக்கு ஒத்துழைப்பு அளித்தார். இக்கட்டான நேரத்தில் மிகவும் பொறுப்பாக விளையாடி தோனி 78 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 87 ரன்கள் எடுத்த போது பும்ரா ஆட்டமிழந்தார். 9 விக்கெட்டுகள் விழுந்ததால் தோனி அடித்து ஆடினார். இரண்டு சிக்ஸர்களை விளாசினார். 65 ரன்கள் எடுத்த நிலையில் சிக்ஸர் அடிக்க முற்பட்டு தோனி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லக்மால் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனையடுத்து 113 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close