சிறுமி ஹாசினி மற்றும் தனது தாயை கொலை செய்த வழக்கில் தப்பி கைதான தஷ்வந்துக்கு 3 நாள் போலீஸ் காவல் அளித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை போரூர் மதனந்தபுரத்தைச் சேர்ந்த ஆறு வயது குழந்தை ஹாசினியை கொன்ற கொலைக் குற்றவாளியான தஷ்வந்த் கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். செலவுகளுக்கு பணம் தர மறுத்த தாய் சரளாவை கடந்த 2-ஆம்
தேதி அடித்துக் கொலை செய்த தஷ்வ்ந்த், வீட்டில் இருந்து பணம் மற்றும் நகைகளுடன் தப்பிச் சென்றார். பின்னர் பெங்களூருவுக்கும் அதனைத்தொடர்ந்து மும்பைக்கும் சென்று தஷ்வந்த் தலைமறைவானார்.
இதையடுத்து மும்பை சென்ற தமிழக தனிப்படை போலீசார், செப்பூர் என்ற இடத்தில் பதுங்கியிருந்த தஷ்வந்தை கடந்த 6-ஆம்தேதி கைது செய்தனர். கைதான பின்னர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய தஷ்வந்த் அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் தஷ்வந்த் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். தஷ்வந்திற்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். போலீஸ் காவல் முடிந்ததும் டிசம்பர் 12-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!