[X] Close >

2-வது டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து ரன் குவிப்பு

Gabriel--Cummins-help-West-Indies-rally

வெஸ்ட் இண்டீஸ் -நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்துள்ளது. 


Advertisement

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. 
நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது.

 அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ராவல் 84 ரன்களிலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லாதம் 22 ரன்னிலும் கேப்டன் வில்லியம்சன் 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ராஸ் டெய்லர் 16 ரன், நிக்கோல்ஸ் 13 ரன், சான்ட்னர் 24, கிராண்ட்ஹோம் 58 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். 


Advertisement

இதையடுத்து முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி, 7 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்ரியல் 3, கம்மின்ஸ் 2, ரோச், ரீபர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close