‘கீரைக்கடை.காம்’ ஆன்லைனில் கீரை விற்கும் கோவை இளைஞர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவையில் ஆன்‌லைன் மூலம் கீரை விற்பனையில் இளைஞர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.‌


Advertisement

கோவை சாய்பாபா காலணி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் பிரசாத். பொறியாளராக பணியாற்றி வந்தவர் தனது வேலையை உதறிவிட்டு, நண்பர்களுடன், இணைந்து 40 வகையான கீரைகளை உற்பத்தி செய்து‌‌ ‌ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறார். இதற்காக கீரைக்கடை.காம் என்று புதிதாக கடை தொடங்கியுள்ளார். 

இருகூரில் உள்ள அவரது நிலத்தில் 7 ஏக்கரில் கீரை விவசாயம் செய்து வருகிறார். தற்போது 1300 வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளதாக கூறுகிறார். அடுக்குமாடி உள்ளிட்ட குடியிருப்பு வாசிகளுக்கு முதல் கட்டமாக 15கி.மீ., வரைக்கும் 35ரூபாய்க்கு மேல் கீரை வாங்குபவர்களுக்கு இலவசமாக டோர் டெலிவரி செய்வதாகவும் தெரிவிக்கிறார். கூடிய விரைவில் ஆன்லைன் மூலம் கீரை விற்பனையில் ஈடுபடவுள்ளதாக கூறுகிறார். இயற்கை முறையிலான வேளாண் தொழில்நுட்பத்தில் விளைவிக்கப்படும் இவ்வகையான கீரைகளுக்கு தற்போது மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement