ஜெயலலிதா மரணத்தை விசாரித்தால் சசிகலா ஆயுள் கைதிதான்.. மு.க.ஸ்டாலின்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக முறையாக விசாரிக்கப்பட்டால், பெங்களூரு சிறையில் இருப்பவர்கள் ஆயுள் கைதியாகவே இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

சட்டப்பேரவையில் ஜன‌நாயகப் படுகொலை நடைபெறுவதாகக் கூறி, அதனைக் கண்டித்து‌ திமுக சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மு.க.ஸ்டாலின், வருங்கால சந்ததியினர் நலமுடன் வாழ தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும், தமிழகத்தைக் காப்பாற்றும் கடமை திமுகவுக்கு உண்டு என்றும் கூறினார்.


Advertisement

மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என கூறிய அவர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக முறையாக விசாரிக்கப்பட்டால், பெங்களூரு சிறையில் இருப்பவர்கள் ஆயுள் கைதியாகவே இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என கூறினார். கட்சி சார்பற்று போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement