சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புகிறார் தோனி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் களமிறங்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரர் தோனி விளையாடுவதில் இருந்த தடை‌ நீங்கியுள்ளது. 


Advertisement

ஐபிஎல் அணிகள் முந்தைய சீசனில் விளையாடிய ஐந்து வீரர்களை தக்‌கவைத்துக் கொள்ள ஐபிஎல் நிர்வாகக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதில் இந்திய வீரர்கள் மூன்று பேரும், வெளிநாட்டு வீரர்கள் இருவரும் இடம்பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மூன்று வீரர்களை நேரடியாகவும், இரண்டு வீரர்களை ரைட் டூ மேட்ச் என்ற முறையில் ஏலத்தின் மூலமாகவும் தேர்வு செய்து கொள்ள, சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. 

கடந்த இரு ஆண்டுகள் விளையாடிய புனே மற்றும் குஜராத் அணி‌களிலிருந்து சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் தங்களுக்கான வீரர்களை தேர்வு செய்து கொள்ள முடியும். இதனால் தோனி, ரெய்னா போன்ற அனுபவ வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement