கிருஷ்ணகிரி அருகே புதிய தலைமுறை சார்பில் மாணவர்கள் மன்றம் துவங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் புதிய தலைமுறை சார்பில் மாணவர்கள் மன்றம் துவங்கப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்களை உறுப்பினர்களாக இணைக்கபட்டு மாணவர்கள் எதிர்காலத்தில் எத்தகைய சவால்களை சந்திக்க உள்ளனர். அதனை எப்படி எல்லாம் எதிர்கொள்ளவது என்பது தொடர்பாக அறிவுரைகள் வழங்கபட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள தாசம்பட்டி கிராமத்தில் உள்ள MKS கோபி கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புதிய தலைமுறை மன்றம் துவங்கப்பட்டது.
புதிய தலைமுறையின் முதன்மை செயல் அலுவலர் ஷயாம் அவர்கள் கலந்துகொண்டு மன்றத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் துணை தலைவர் பிரசன்னா குமார் வரவேற்பு உரையாற்றினர். பள்ளியின் தாளாளர் புஷ்பக் தலைமை வகித்து உரையாற்றினார். மன்றத்தை துவக்கி வைத்து மாணவர்களிடம் உரையாற்றிய புதிய தலைமுறையின் முதன்மை செயல் அலுவலர் ஷயாம், “இன்றைய காலத்தில் மாணவர்கள் எப்படி படிக்க வேண்டும். எதிர்காலத்தில் எப்படி சாதிக்க வேண்டும். அப்துல்கலாம் அவர்கள் தெரிவித்தபடி கனவு காண வேண்டும். உங்களுக்குள் தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும். திறமைகளுக்கு ஏற்ற வழிகளில் பயணிக்க வேண்டும். எந்த பணியை செய்யும் முன்பும் யோசிக்க வேண்டும். சரியான வழியில் உங்களுக்கு உள்ள வேலை வாய்ப்புகளை தேர்வு செய்ய வேண்டும்” என மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் நிர்வாக அலுவலர் செந்தில்குமார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன், புதிய தலைமுறை துணை மேலாளர் சாய்கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!