JUST IN
  • BREAKING-NEWS ‌அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையால் இந்தியாவிற்கு எந்த பலனும் இருக்காது..! - சுப்பிரமணியன் சுவாமி
  • BREAKING-NEWS ‌கருணாநிதியின் திமுக தற்போது பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ‌இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து குறித்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு துனை ஆணையர் நாகஜோதி நியமனம்
  • BREAKING-NEWS ‌சிஏஏ, என்பிஆர் சட்டங்களால் தமிழக மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
  • BREAKING-NEWS ‌’கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு’ - மன் கி பாத் நிகழ்ச்சியில் ஔவையார் வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேச்சு
  • BREAKING-NEWS ‌இந்தியாவில் பல்லுயிரியல் என்பது மதிப்பு மிக்க பொக்கிஷம்; அதை நாம் பாதுகாக்க வேண்டும் - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரியே கூறினார்: விஷால்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தனது வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரியே கூறினார் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து விஷால் நீண்ட நேரமாக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்து வாக்குவாதம் செய்தார். அத்துடன் தன்னை முன் மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதாகவும், அதற்கான ஆடியோ ஆதராத்தையும் தேர்தல் அதிகாரியிடம் அளித்தார். இதையடுத்து விஷால் மனு ஏற்கப்பட்டதாக விஷால் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு பிரத்யோகப் பேட்டியளித்த விஷால், “மக்களுக்கு நல்லது செய்வதற்கு இடையூறு வரும் என தெரியும். ஆனால் இவ்வளவு பிரச்னை வரும் என தெரியாது. ஆனால் இறுதியாக நேர்மை வென்றுள்ளது. மாற்றம் வரும் என்ற சூழ்நிலை இருக்கும்போது அதை யாரும் தடுக்க முடியாது. எனக்கு வாழ்த்து தெரிவித்து கெஜ்ரிவாலுக்கு மிக்க நன்றி. கெஜ்ரிவால் கூறியது போன்று நேர்மையே வென்றுள்ளது. ஜனநாயகத்தை பாதுகாத்த தேர்தல் ஆணையத்திற்கும், எனக்காக குரல் கொடுத்த சக நண்பர்களுக்கும் நன்றி. தேர்தல் அதிகாரியே மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று எல்லோருக்கும் முன்னாள் தெரிவித்தார். அதற்கான வீடியோ ஆதாரங்களும் உள்ளது. நடிகர் கமல்ஹாசன் கூறி ஆர்.கே நகரில் நான் போட்டியிடவில்லை. நான் போட்டியிடுவதில் அரசியல் பின்ணணி எதுவும் இல்லை. நடிகர் கமல்ஹாசனை நாளை சந்தித்துப் பேசவுள்ளேன்” என்று கூறினார். 

வீடியோ

Advertisement: