எந்தச் சின்னம் கொடுத்தாலும் சரி: தீபா கருத்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

எந்தச் சின்னம் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன் என்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவி தீபா கூறியுள்ளார்.


Advertisement

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. அதனையொட்டி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு இடையில் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த அவர், “எந்தச் சின்னம் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன்” என்று கூறியிருக்கிறார். அத்துடன் “முதலில் எனது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இப்போதையை சூழலில் என மனு நிராகரிக்கப்பட்டவும் அதிக வாய்ப்பு உள்ளது.” என்று கூறியிருக்கிறார்.
அவர் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன்பே இவ்வாறு பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கூடியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement