லாரா சாதனையை முந்தினார் விராத் கோலி

Virat-Kohli-over-take-Brian-Lara---s-record

கேப்டன் பொறுப்பில் இருந்து அதிக இரட்டை சதங்கள் அடித்து விராத் கோலி சாதனை படைத்துள்ளார்.


Advertisement

இலங்கை அணியுடனான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய கேப்டன் விராத் கோலி அபாரமாக ஆடி இன்று இரட்டை சதம் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராத் கோலி அடித்த 6 வது இரட்டை சதம் இது. 
இந்திய வீரர்களில் ஷேவாக், சச்சின் தெண்டுல்கர் தலா 6 இரட்டை சதம் அடித்துள்ளனர். அவர்களை சமன் செய்தார் விராத் கோலி. 

இந்த 6 இரட்டை சதங்களையும் கேப்டன் பதவியில் இருந்த போதே கோலி அடித்துள்ளார். கேப்டனாக அதிக இரட்டை சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் வெஸ்ட் இண்டீஸின் பிரைன் லாரா (5) முதல் இடத்தில் இருந்தார். அவரை முந்தியுள்ளார் கோலி. அடுத்த வரிசையில் டான் பிராட்மேன், மைக்கேல் கிளார்க், கிரேமி சுமித் (4 இரட்டை சதம்) உள்ளனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement