ஊசலாடும் தொப்பி சின்னம் தினகரனுக்குக் கிடைக்குமா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தொப்பி சின்னம் தொடர்பான வாதங்களை கேட்ட டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கை வரும் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.


Advertisement

டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் மதுசூதனன் போட்டியிடுகிறார். சசிகலா அணி தரப்பில் போட்டியிடும் டிடிவி தினகரன், தனது ஆதரவாளர்களுடன் புதிய கொடிகளோடு இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே தனக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தொப்பி சின்னத்தையே வழங்க வேண்டும் எனவும் தினகரன் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தொப்பி சின்னத்தை டிடிவி தினகரன் மட்டும் கோரினால் அதை ஒதுக்குவதில் பிரச்னை இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அப்போது 3 சுயேட்சைகள் ஏற்கனவே தொப்பி சின்னத்தை கோரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது. அதேசமயம், தொப்பி சின்னம் கேட்டுள்ள 3 சுயேட்சைகளும் திட்டமிட்டே தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளதாக தினகரன் தரப்பு வாதிட்டது. 


Advertisement

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் தொப்பி சின்னம் ஒதுக்குவது தொடர்பான வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டது. அத்துடன் 4ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது. இதனால் தொப்பி சின்னத்தில் தினகரன் போட்டியிடுவது உறுதியாக நிலையில் உள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement