ஒரே மாதிரி நெம்பர் பிளேட்டில் 19 சொகுசு கார்கள் வாங்கிய சட்டீஸ்கர் முதலமைச்சர்

Superstition-in-top-gear-Chhattisgarh-CM-Raman-Singh-buys-19-Pajero-SUVs-with-identical-numbers

சட்டீஸ்கர் முதலமைச்சர் ராமன் சிங், ஒரே மாதிரியான நெம்பர் பிளேட் கொண்ட 19 சொகுசு கார்கள் வாங்கி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


Advertisement

சட்டீஸ்கரில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ராமன் சிங் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். முதலமைச்சர் ராமன் சிங் சமீபத்தில் பஜிரோ எஸ்.யு.வி வகையிலான 19 சொகுசு கார்களை வாங்கியுள்ளார். இதில் சர்ச்சை என்னவென்றால், அவர் வாங்கிய கார்களின் நெம்பர் பிளேட்கள் அனைத்தும் கடைசியில் ‘004’ என்ற எண்ணில் முடிவடைகிறது. ராசியான எண் என்பதால் இந்த எண்ணை அவர் வாங்கியிருக்கக் கூடும் என்று விமர்சனங்கள் எழுந்தது.    

  


Advertisement

 

 

 


Advertisement

ஆனால், நியூமராலஜி அல்லது ஜோதிடத்தில் தமக்கு நம்பிக்கை இல்லை என்று முதலமைச்சர் ராமன் சிங் கூறினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராமன் சிங், “கார்களின் நெம்பர் பிளேட்கள் எங்களால் முடிவு செய்யப்படுவதில்லை. ஆர்.டி.ஓ-க்கள் தான் முடிவு செய்வார்கள். எங்களுக்கு கிடைத்த எண்களே அதிர்ஷ்டமானவை. கண்மூடித்தனமாக மேஜிக்கை நம்பவில்லை” என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement