[X] Close >

விதி மீறி மணல் அள்ளியவர்களை கட்டுப்படுத்தாதது அரசின் தவறு: லாரி உரிமையாளர்கள் சங்கம்

Sand-Larry-owners-association-said-about-sand-quarries-judgement

விதிமுறைகளை மீறி மணல் அள்ளியவர்களை கட்டுப்படுத்த அரசு தவறியதால், குவாரிகளை மூட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.


Advertisement

தமிழகத்தில் 6 மாதங்களுக்குள் அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் மேற்கொண்டு புதிதாக மணல் குவாரிகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்காக கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், சட்டவிரோத மணல் விற்பனைக்கு துணை நிற்கும் அதிகாரிகள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், மணல் குவாரிகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் கட்டுமானத்தொழில் கடுமையாக பாதிக்கும் என தெரிவித்துள்ளனர். விதிமுறைகள் மீறி மணல் அள்ளியவர்களை கட்டுப்படுத்த அரசு தவறியதால், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்யப்பட்டால் அதிக விலைக்கு வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும், அதனை தடுக்க மணல் குவாரிகளை முறைப்படுத்தி அரசு செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close