இந்திய போர் விமானத்தை ரசித்த சிங்கப்பூர் அமைச்சர்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸ் போர் விமானம் அதீத திறன் வாய்ந்தது என சிங்கப்பூர் பாதுகாப்பு துறை அமைச்சர் எங் ஹென் பாராட்டியுள்ளார்.


Advertisement

கப்பல் போக்குவரத்து தொடர்பான ஒப்பந்த பேச்சுவார்த்தை நிகழ்ச்சி டில்லியில் நடைபெற இருக்கிறது. இதில் பங்குக்கொள்வதற்காக சிங்கப்பூர் அமைச்சர் எங் ஹென் இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் கலைகொண்டா விமானப்படை தளத்தை பார்வையிட்ட அவர், தேஜாஸ் போர் விமானத்தில் சுமார் 1 மணி நேரம் பயணித்தார்.

அப்போது தேஜாஸ் போர் விமானத்தில் பயணித்ததைக் குறித்து பகிர்ந்துக் கொண்ட எங் ஹென், தேஜாஸ் உண்மையிலேயே அதீத திறன் வாய்ந்த போர்விமானம் என்று கூறினார். மேலும் இதில் பயணித்தது தன்னால் மறக்க முடியாத அனுபவம் என்றும் கூறினார். அதேபோல் இந்த போர் விமானத்தை சிங்கப்பூருக்காக வாங்க விரும்புவதாகவும் தெரிவித்தார். எங் ஹென் பயணிப்பதற்காக பெங்களூருவில் இருந்து இரண்டு தேஜாஸ் போர் விமானங்கள் மேற்கு வங்கத்திற்கு வரவழைக்கப்‌பட்டது குறிப்பிடத்தக்கது. 
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement