ஹரஹர மகாதேவகி இயக்குநருடன் இணையும் ஆர்யா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் ஆர்யாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Advertisement

ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் அவருக்கு பெரிய வெற்றியை ஈட்டித்தரவில்லை. ராஜாராணிக்கு பிறகு வேறு எந்தப்படமும் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. சமீபத்தில் சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா படத்திற்கு ஆர்யா ஒப்பந்தமானார். ஆனால் இன்னும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவில்லை. 

இந்நிலையில், ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஒரு படத்தில் ஆர்யா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்படத்தை சந்தோஷ் ஜெயகுமார் இயக்குகிறார். இவர் சமீபத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான 'ஹரஹர மகாதேவகி'  படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யா - சந்தோஷ் ஜெயகுமார் இணைந்துள்ள இந்த படமும் முந்தைய படம் போலவே காமெடி ட்ராக்கை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்யாவுக்கு ஜோடியாக ‘வனமகன்’ சயிஷா நடிக்கிறார்.
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement