[X] Close >

செவிலியர்கள் போராட்டத்தை தொடர்ந்தால் பணிநீக்கம்: டிஎம்எஸ் வளாகத்தில் எச்சரிக்கை பலகை

Warning-to-Protesting-Nurses

செவிலியர்கள் பணிக்கு வர தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நேற்று முன்தினம் தங்களது போராட்டத்தைத் தொடங்கினர். இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்த நிலையில் செவிலியர்களின் பிரதிநிதிகளை அழைத்து அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதால் ஒருதரப்பு செவிலியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இதனிடையே பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணை 191-ஐ வெளியிடும் வரை தங்களது போராட்டம் தொடரும் என மற்றொரு தரப்பு செவிலியர்கள் 3-ஆவது நாளாக தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர். இந்நிலையில் செவிலியர்கள் நடத்தி வரும் போராட்டம் மருத்துவ சேவையை பாதிக்கிறது என தெரிவித்துள்ள கிராமப்புற மருத்துவ சேவை இயக்குநரகம், செவிலியர்கள் பணிக்கு வர தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டம் தொடர்ந்தால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போராட்டம் நடைபெற்று வரும் டிஎம்எஸ் வளாகத்தில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close