[X] Close >

திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

school-leave-for-tiruvarur-district

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்துவருகிறது.  கடந்த பத்து நாட்களாக மழை குறைந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மீண்டும் தமிழகம் முழுவதும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்கிறது.

இந்நிலையில் திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு முழுவதும் கனமழை பெய்தது. காலையும் மழை தொடர்வதால் திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர்  நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close