செவிலியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில், 2015 ஆம் ஆண்டில் மருத்துவர் தேர்வாணைய தகுதித் தேர்வின் மூலம் பணியமர்த்தப்பட்ட 11,000 செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தமிழக அரசு ஏமாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார். கடன்பட்டு கஷ்டப்பட்டு படித்து வந்த செவிலியர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய வேல்முருகன், கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய செவிலியர்கள் டிஎம்எஸ் வளாகத்தில் சிறைவைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, செவிலியர்கள் போராட்டத்தில் உண்மையை உணராமல் அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிப்பதாக கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், நீதிமன்ற வழக்குகளால் செவிலியர்கள் பணி நியமனம் தாமதாகியுள்ளதாகவும் கூறினார்.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?