நிவாரணம் கோரி விவசாயிகள் 2ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருத்துறைப்பூண்டி அருகே வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் 2ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Advertisement

அம்மனூர், நெடுபலம், பாமணி, கொருக்கை, மணலி உள்ளிட்ட உள்ள திருத்துறையைப்பூண்டி பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ஊராட்சி அலுவலகங்களின் எதிரே நடந்துவரும் இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் பங்கேற்றுள்ளனர். இரவிலும் இந்தக் காத்திருப்புப் போராட்டம் நீடித்தது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் அங்கேயே உணவு சமைத்து உட்கொண்டனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய உதவிகள், தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு இழப்பீடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement