2வது டெஸ்ட்: வெற்றியை நோக்கி இந்திய அணி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. 


Advertisement

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான, இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் முரளி விஜய் சதம் (128 ரன்கள்), கேப்டன் விராத் கோலி இரட்டை சதம் (213 ரன்கள்), புஜரா (143 ரன்கள்), ரோகித் ஷர்மா (102 ரன்கள்) ஆகியோரின் சதத்தால் 610 ரன்கள் குவித்தது. பின்னர் டிக்ளேர் செய்தது. 

405 ரன்கள் பின் தங்கிய இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சமரவிக்ரமா (0), இஷாந்த் ‌ஷர்மா பந்தில் நேற்று கிளீன் போல்டு ஆனார். இன்று நான்காவது ஆட்டம் தொடங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத இலங்கை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கேப்டன் சண்டிமால் மட்டும் நிலைத்து நின்று ஆடி வருகிறார். அவருடன் பந்துவீச்சாளர் லக்மல் ஆடுகிறார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் 12.35 மணி நிலவரப்படி, இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களுடன் போராடி வருகிறது.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement