ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நிறுவனம் எச்சரித்துள்ளதற்கு திருவாரூர் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
விவசாயத்தை விட்டால் சாவதை தவிர வேறு வழியில்லை எனும் நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எச்சரிக்கையை தாங்கள் பொருட்படுத்தப் போவதில்லை என திருவாரூர் பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மண்ணின் மைந்தர்களை மிரட்டும் அதிகாரத்தை ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு கொடுத்தது யார் என்றும் அவர்கள் கேள்வியெழுப்பினர்.
அனைத்து விதமான சான்றிதழ்களும் பெறப்பட்ட பின்னரே தங்கள் நிறுவனம் துரப்பனப் பணிகளை மேற்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தை நாடி சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அனுமதி பெற்று செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓஎன்ஜிசி நிறுவனம் எச்சரித்திருந்தது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த தென்னஞ்சார் கிராமத்தில் விவசாய நிலத்தின் நடுவில் புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நன்னிலம், சன்னாநல்லூர், ஆண்டிப்பந்தல், ஸ்ரீவாஞ்சியம், வாழ்கை உள்ளிட்ட 8 கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை