ஆர்.கே.நகரில் விதிக்கப்பட்டுள்ள பிரச்சார கட்டுப்பாடுகள் குறித்த அதிமுகவின் நிலைப்பாட்டினை தலைமை முடிவு செய்யும் என அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ஆம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி இணைப்புக்கு பின் நடைபெறும் தேர்தல் என்பதால், அதிமுகவில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்படுகிறது. அதிமுகவில் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக அதிமுகவின் ஆட்சிமன்றக் குழுக்கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை காலை கூடுகிறது.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மதுசூதனன், ஆர்.கே.நகரில் மாலை 5 முதல் காலை 9 மணி வரை வீடு வீடாக பிரசாரம் செய்ய விதிக்கப்பட்ட தடை குறித்த அதிமுகவின் நிலைப்பாடு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். அத்துடன் ஆர்.கே.நகர் வேட்பாளர் யார் என்பது பற்றி நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறினார். இதற்கிடையே வாக்காளர் பட்டியல் திருத்த முகாமையும் அவர் பார்வையிட்டார்.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்