[X] Close >

வேலூர் அருகே காரில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு

bomb-seized-from-car-in-vellore

வேலூர் மாவட்டம் அரிகிலபாடி கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து நாட்டு வெடிகுண்டு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


Advertisement

அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் உள்ள தொடக்கப்பள்ளியின் அருகே கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில், நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது.இதனையடுத்து காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்தனர்.

உயிரிழந்த ரவுடி ஸ்ரீதரின் கார் ஓட்டுநர் தினேஷை நேற்று வெடிகுண்டு‌ வீசி கொல்ல முயற்சி நடந்தது. எனவே, தற்போது சிக்கியுள்ள கார் கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பலுக்குச் சொந்தமானதா என்ற கோணத்தில் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close