‘பத்மாவதி’ படத்தை பிரிட்டனில் வெளியிடப்போவதில்லை: படக்குழு விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ‘பத்மாவதி’ திரைப்படத்தை பிரிட்டனில் வெளியிடப்போவதில்லை என்று படக்குழு விளக்கம் அளித்துள்ளது.


Advertisement

‘பத்மாவதி’ படத்திற்கு எந்த காட்சியும் நீக்கப்படாமல் பிரிட்டன் தணிக்கை துறை சான்றிதழ் அளித்ததை அடுத்து, அப்படம் திட்டமிட்டபடி டிசம்பர் 1ஆம் தேதி பிரிட்டனில் வெளியாகும் என்று தகவல் வெளியானது. இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள், இந்திய சென்சார் போர்டு தணிக்கை செய்யாமல் படத்தை பிரிட்டனில் வெளியிடப்போவதில்லை என்று கூறியுள்ளனர். இந்த தகவல் வெளியானதும், ‘பத்மாவதி’ படத்தை பிரிட்டனில் வெளியிடுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு வரும் நவ.28ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதுகுறித்து விளக்கம் அளித்த ‘பத்மாவதி’ படத்தின் தயாரிப்பாளர்கள், “மத்திய தணிக்கைக்குழுவின் சான்றிதழ் பெறாமல் பிரிட்டனில் மட்டுமல்ல; சர்வதேச அளவில் எங்குமே படத்தை வெளியிடப்போவதில்லை” என்று கூறியுள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement