நாக்பூரில் இன்று 2ஆவது டெஸ்ட்: களமிறங்குகிறார் முரளி விஜய்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் தமிழக வீரர் முரளி விஜய் களமிறங்குகிறார்.


Advertisement

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2 வது டெஸ்ட் போட்டி, நாக்பூரில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்தப்போட்டி காலை ஒன்பதரை மணியளவில் ஆரம்பிக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றியை குறிவைத்து இந்திய அணி களமிறங்குகிறது. தவான் சொந்த காரணங்களால் விலகியுள்ள நிலையில் ராகுலுடன், தமிழக வீரர் முரளி விஜய் தொடக்க வீரராக களமிறங்குகிறார். 


Advertisement

தென்னாப்பிரிக்க தொடரை கருத்தில் கொண்டு கொல்கத்தா ஆடுகளம் புற்களுடன் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக தயார்படுத்தப்பட்டிருந்தது. இந்த டெஸ்ட் போட்டிக்கும் அதே போன்ற ஆடுகளமே தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இங்கும் முதல் 3 நாட்கள், வேகப்பந்து வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
முதல் டெஸ்ட்டில் விக்கெட் எடுக்காத சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வினும் ஜடேஜாவும் இந்த போட்டியில் 4 மற்றும் 5 நாட்களில் விக்கெட் எடுக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. 

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement