[X] Close >

கடன் பிரச்னையா?: தொழிலதிபர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை

Businessman-suicide-in-Nilgiris

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைதானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் பிரச்னை காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement

நீலகிரிமாவட்டம் கோத்தகிரி அருகே தொழிலதிபர் பெள்ளிராஜ். இவருக்கு சொந்தமாக எஸ்டேட்கள் மற்றும் தனியார்பள்ளி உள்ளது. தனியார் பள்ளியை நிர்வகித்து வந்த அவர் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு கடன் பிரச்சனை காரணமாக வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார். அவருக்கு தொடர்ந்து கடன்பிரச்சனை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இன்று காலை தனது வீட்டில் தன் அறைக்குச் சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே வீட்டில் இருப்பவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்கொலைக்கு கந்துவட்டி பிரச்சனையா அல்லது வேறு எதாவது காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close