ரேஷனில் விநியோகம் செய்யப்படும் பச்சரிசி, புழுங்கலரிசி விநியோகத்தில் மாற்றம் செய்யப்பட்ட உள்ளது.
தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் ரேசன் கடைகளில் இலவசமாக பச்சரிசி, புழுங்கலரிசி விநியோகிக்கப்படுகிறது. அதேபோல், சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணை ஆகிய பொருட்கள் கட்டுப்பாட்டு பொருட்கள் என்ற பெயரில் மானிய விலையில் வழங்கப்பட்டுவருகின்றன.
இதில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி 10 கிலோவும் புழுங்கலரிசி 10 கிலோவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரேஷன் கார்டுக்கு 70 சதவீதம் புழுங்கல் அரிசியும், 30 சதவீதம் பச்சரிசியும் விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிடங்கு பொறுப்பாளர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், இந்திய உணவு கழகத்தில் இருந்து 70:30 என்ற விகிதத்தில் ரேஷன் அரிசி பெறப்படுகிறது. அதே விகிதத்தில் பச்சரிசி, புழுங்கல் அரிசி விநியோகம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் கிடங்கு பொறுப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 14 கிலோ புழுங்கல் அரிசியும், 6 கிலோ பச்சரியும் வழங்கப்படும் என்று தெரிகிறது.
Loading More post
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
“சத்தம் ரொம்ப அதிகமா இருக்கு” - அகமதாபாத் ஆடுகள சர்ச்சை குறித்து கோலி கருத்து
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?