மெரினாவில் உலக மீனவர் தின நி‌கழ்ச்சி: தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு

World-fisheries-Day-in-Marina--Tamilnadu-Soundararajan-Participation

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மெரினாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு உரையாற்றினார். 


Advertisement

நாடு முழுவதும் உலக மீனவர் தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் பாரதிய ஜனதா கட்சியின் மீனவப் பிரிவு சார்பில் உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துக்கொண்டு மீன்கள் கண்காட்சியை பார்வையிட்டார். பின்பு அங்கிருந்த பொதுமக்களுக்கு மீன் உணவு‌க‌ளை வழங்கினார். 

பின்னர் பேசிய அவர், அனைத்து மீனவர்களுக்கும் உலக மீனவர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்பு ஆளுநரின் களப்பணியை மக்கள் வரவேற்பதாகவும், ஆளுநரின் இந்தப் பணியானது பலம் அளிக்குமே தவிர பலவீனமாகாது எனவும் கூறினார். கோவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மேற்கொண்ட அதிரடி ஆய்விற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும், நிலையில் தமிழசை ,இவ்வாறு கூறியுள்ளார்.   
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement