44 பேருடன் மாயமான நீர்மூழ்கிக் கப்பல்: தேடும் பணி தீவிரம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அர்ஜென்டினாவில் மாயமான நீர்மூழ்கி கப்பலை மோசமான வானிலைக்கு இடையே கடற்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். 


Advertisement

தெற்கு ‌அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த அர்ஜென்டினாவின் நீர்மூழ்கி கப்பல் 44 பேருடன்‌ நடுக்கடலில் திடீரென மாயமானது. இந்நிலையில் வால்டெஸ் தீபகற்பத்தில் இருந்து அந்த கப்ப‌லின் செயற்கைகோள் சமிக்ஞைக‌ள் கிடைத்து. இதைத்தொடர்ந்து அமெரிக்கா உ‌ள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கடற்படையினர் ‌அங்கு விரைந்து தேடி வருகின்றனர். 

இந்த தேடுதல் பணியில் நாசாவின் ஆய்வு விமானமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்தச்‌ சூழலில் மோசமான வானிலை காரணமாக பலத்த காற்றும், ராட்சத அலைகளும் எழுவதால் தேடுதல் ப‌ணிக்கு மிகுந்த இடையூறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் முதற்கட்ட சோதனையில், வழக்கமான ரோந்து பணிக்காக சென்ற அந்த நீர்மூழ்கி கப்பல் மீண்டும் தனது தளத்துக்கு திரும்பிக்‌கொண்டிருந்தபோது மாயமானதாக தெரியவந்துள்ளது.
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement