முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி மேலுர் 4 வழிச்சாலையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக மதுரை திருச்சி சாலையில் போக்குவரத்து முடங்கியது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்து விடக்கோரி மேலூர் 4 வழிச்சாலையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாவினிப்பட்டி, கிடாரிப்பட்டி, திருவாதவூர் உள்ளிட்ட பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் மதுரை மேலூர் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
இதனால் திருப்பத்தூர், தஞ்சை செல்லும் வாகனங்கள் சிவகங்கை வழியாக திருப்பிவிடப்பட்டன. இதேபோன்று பிறபகுதிக்கு செல்லும் வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு சக விசாயிகள் உணவு மற்றும் தண்ணீர் வழங்கி ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே வைகை அணையில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
Loading More post
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
பஞ்சாப் அணியை 120 ரன்களில் கட்டுப்படுத்தியது ஹைதராபாத்!
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ
மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு தள்ளுபடி - புதிய மனுவை தாக்கல் செய்ய உத்தரவு
சி.ஏ. படிப்புக்கான அடிப்படைத் தேர்வுக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம்
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்