மதுரை மேலூரில் விவசாயிகள் போராட்டம்

மதுரை மேலூரில் விவசாயிகள் போராட்டம்
மதுரை மேலூரில் விவசாயிகள் போராட்டம்

மதுரை மேலூரில் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், வணிகர்கள், பொது மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து, தேனி கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பி.டி.ஆர். கால்வாய் மற்றும் தந்தை பெரியார் விரிவாக்க கால்வாய்ப் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக மேலூர் பகுதியில் உள்ள ஒருபோக சாகுபடிக்கு தண்ணீர் திறந்த பிறகே, விரிவாக்க கால்வாய்ப் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும், ஆனால் தற்போது தங்களுக்கு இதுவரை தண்ணீர் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை எனக் கூறி மேலுர் பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலூர் கோட்டாட்சியர் பன்னீர்செல்வம், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தால் மட்டுமே கலைந்துசெல்வோம் எனக்கூறி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். 
இந்தப் போராட்டம் திமுக, இடதுசாரிகள், மதிமுக மற்றும் டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக மேலூர் பகுதியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com