Advertisement

கோலி 50-வது சதம்: இலங்கைக்கு 231 ரன் இலக்கு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி சதம் அடித்தார். இது அவருக்கு 50-வது சதம். 


Advertisement

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் ஐந்தாம் நாளான இன்று இந்திய அணியின் வீரர்கள், தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்துக் கொண்டிருந்தனர். கேப்டன் விராத் கோலி நிலைத்து நின்று ஆடினார். அவர் லக்மல் பந்தில் சிக்சர் அடித்து அபார சதமடித்தார். அவர் இதற்காக 119 ரன்களை சந்தித்தார். இது அவருக்கு 50-வது சதம். டெஸ்ட் போட்டியில் இது அவருக்கு 18-வது சதம் ஆகும். ஒரு நாள் போட்டிகளில் அவர் 32 சதம் அடித்துள்ளார். 

பின்னர், போட்டி டிக்ளர் செய்யப்பட்டது. இதையடுத்து இலங்கை அணி ஆடிவருகிறது. அந்த அணி வெற்றி பெற இந்திய அணி 231 ரன் இலக்கு நிர்ணயித்துள்ளது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement