கொல்கத்தா டெஸ்ட்: கோலி அபார சதம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி சதம் அடித்தார்.


Advertisement

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் 4வது நாளான நேற்று இந்திய அணி, தனது 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்திருந்தது.  ஐந்தாம் நாளான இன்று இந்திய அணியின் வீரர்கள், தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்துக் கொண்டிருந்தனர். கேப்டன் விராத் கோலி நிலைத்து நின்று ஆடினார். அவர் லக்மல் பந்தில் சிக்சர் அடித்து அபார சதமடித்தார். அவர் இதற்காக 119 ரன்களை சந்தித்தார். அவர் 104 ரன்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறார். மறுமுனையில் முகமது ஷமி 12 ரன்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறார். இதையடுத்து இந்திய அணி 230 ரன் முன்னிலை பெற்றுள்ளது. 
 

loading...

Advertisement

Advertisement

Advertisement