புனே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் புனே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகியுள்ளார்.


Advertisement

கேப்டன் பொறுப்பிலிருந்து தம்மை நீக்குமாறு தோனி கேட்டுக்கொண்டதை அடுத்து புனே அணி நிர்வாகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதேநேரம் புனே அணியில் ஒரு வீரராகத் தொடர தோனி விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் புனே அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் மட்டுமல்லாது ஐபிஎல் தொடரிலும் வெற்றிகரமான கேப்டனாக அறியப்பட்ட தோனி, இதற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர். அந்த அணி தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, ஐபிஎல் தொடரில் புதிதாகச் சேர்க்கப்பட்ட புனே சூப்பர்ஜியாண்ட்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த ஐபிஎல் போட்டியில் அந்த அணி 14 போட்டிகளில் விளையாடி 5-ல் மட்டுமே வெற்றி பெற்று 7வது இடத்தை பிடித்தது. இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி சமீபத்தில் விலகியது குறிப்பிடத்தக்கது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement