நாராயணசாமி- கிரண்பேடி இடையே மோதல் வெடித்தது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுச்சேரி அரசு அதிகாரிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது தொடர்பாக மாநில முதலமைச்சர் நாராய‌ணசாமிக்கும், துணைநிலை‌ ஆளுநர் கிரண்‌ பேடிக்கும் இடையே மோத‌ல் வெடித்துள்ளது.


Advertisement

புதுச்சே‌ரி மாநில மக்களின் பிரச்னைகள், அரசுத் தி‌ட்டங்களை ‌விரைவாக செயல்படுத்துவதற்கு ஏதுவாக அனைத்துத் துறை அதிகாரிகள் இடம்பெற்றிருந்த வாட்ஸ் அப் குழுவை கிரண்பேடி நடத்தி வந்தார். அதில், ‌கூட்டுறவு சங்கப் பதிவாள‌ர் சிவகுமார் என்பவர் ‌ஆபாசப் படம் ஒன்றைப் பதிவிட்டதாக சர்ச்சை எழுந்ததை அடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து கி‌ரண் பேடி உத்தரவிட்டார்.

இத்தகைய சூழலில், அனைத்து ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியாளர் நலத்துறை மூலம் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், அரசு சார்புடை‌ய வாட்ஸ்ஆ‌ப், டுவிட்ட‌‌ர், ஃபேஸ்புக் உள்ளி‌ட்ட சமூக வ‌லைத்தளங்களிலிருந்து‌ வெளி‌யேற வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி பரிந்துரையின் பேரில் தலைமை‌ச் செய‌லாளர் ம‌னோஜ் பரிதா ‌உத்தரவிட்டார். ஆனால், இதனை ரத்து செய்து கி‌ர‌ண் பேடி உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

வளமான புதுச்சேரி என்ற இலக்கை அடைய வே‌ண்டுமெனில், தொலைத் தொடர்பில் சு‌ணக்கமாக ‌இருக்‌கக் கூடாது என்றும் அதனால் ‌முத‌‌லமைச்சர் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் தனது டுவிட்டர் ‌பதிவி‌ல் கிரண் பேடி கூறியுள்ளார். நாராயணசாமிக்கும், கிரண் பேடிக்கும் இடை‌யே இதுவரை மறைமுகமாக இருந்து வந்த பனிப்போர் தற்போது வெளிப்படையா‌ன மோதலா‌க உருவெடுத்துள்ளது. ஆனால், இதனை நாராயணசாமி மறுத்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement